பக்கம்:கேள்வி நேரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


இப்போது கேட்கப் போகிறேன். முதன் முதலாகச் சந்திர மண்டலத்திற்குச் சென்றவர்கள் எந்த நாட்டினர் ?

தங்கம் : அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் முதன் முதலாகச் சென்றார்கள்.

சிவம்: நீ சொன்னது சரிதான். கடைசியாக ஒரு கேள்வி. நான்கு பேருக்கு ஒரு சமையல் காரரால் ஒரு மணி நேரத்தில் சமையல் செய்ய முடிகிறது. அதே நாலு பேருக்கு ஒரே நிமிஷத்தில் சமைக்க வேண்டுமானால், எத்தனை சமையற்காரர்கள் வேண்டும்?

ஜோதி: அறுபது

(முத்துவும் தங்கமும் சிரிக்கிறார்கள்.)

ஜோதி: ஏன் சிரிக்கிறீர்கள்?

முத்து : ஜோதி சொன்னது, கணக்குப்படி சரிதான். ஆனால், சமையல் ஆகுமோ?

சிவம்: எப்படி ஆகும் 60 பேரும் வந்து நின்றாலே ஒரு நிமிஷம் ஓடிப் போய்விடுமே! அடுப்பு எரிய வேண்டாமா? அரிசி வேக வேண்டாமா?

எல்லோரும் : ஆமாம், ஆமாம்.

(சேர்ந்து சிரிக்கிறார்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/54&oldid=484638" இலிருந்து மீள்விக்கப்பட்டது