பக்கம்:கேள்வி நேரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


ரவி : டெலிவிஷனில் அடிக்கடி பார்க்கிறோமே.

இரத்தின : அப்படியா ? அப்போட்டியில் முக்கிய மான நிபந்தனை எது, தெரியுமா ?

சதீஷ் : ஒடக் கூடாது.

இரத்தின: ஓடினால்தான் அது நடைப் போட்டியாக இருக்காதே ! நடக்கிறார்களா , ஒடுகிறார்களா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?

ரவி : போட்டியில் கலந்துகொள்பவர்களின் பாதங்களை நான் கவனமாகப் பார்த்திருக்கிறேன். ஏதாவது ஒரு பாதம் எப்போதும் தரையைத் தொட்டுக் கொண்டே இருக்கிறது.

இரத்தின : ரவி சொன்ன மாதிரி, இரண்டு பாதங்களில் ஒன்று எப்போதும் தரையைத் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் முக்கியமான விதி.

...சரி, நீங்கள் வான வில் இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/57&oldid=494372" இலிருந்து மீள்விக்கப்பட்டது