பக்கம்:கேள்வி நேரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


திசையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சூரியன். எந்தப் பக்கத்தில் இருக்கும் ?

விஜி : எனக்குப் பின் பக்கத்திலே இருக்கும்.

இரத்தின : கரெக்ட்.

...ஒரு நாட்டின் பெயரைத் தமிழில் மொழி பெயர்த்தால் உதய சூரியன்' என்று வரும். அந்த நாட்டை நாம் எப்படி அழைக்கிறோம் ? அந்த நாட்டுக்காரர்கள் எப்படி அழைக் கிறார்கள்?

ரவி : ஜப்பான் என்று நாம் அழைக்கிறோம். நிப்பன் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

இரத்தின : அடடே, ரவி ரொம்பச் சரியாகக் சொல்லிவிட்டானே!....

...அடுத்தது குரங்கைப் பற்றிய கேள்வி. ...குரங்குகளில் பல வகை உண்டு. சில வகைகளின் பெயர்கள் உங்களுக்குத் தெரிந் திருக்கலாம். சொல்லுங்கள், பார்க்கலாம்.

விஜி: கொரில்லாக் குரங்கு, சிம்பான்ஸிக் குரங்கு, நாய்க் குரங்கு, கிப்பன் குரங்கு... அப்புறம் அப்புறம்.

ரவி : நாமக் குரங்கு.

இரத்தின : நீ சொல்ற நாமக் குரங்கும், விஜி சொன்ன நாய்க் குரங்கும் ஒன்றுதான்.

ரவி : அப்படியா, சரி, கருங்குரங்கு, அனுமன் குரங்கு, துதிக்கை மூக்குக் குரங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/58&oldid=484641" இலிருந்து மீள்விக்கப்பட்டது