பக்கம்:கேள்வி நேரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


சதீஷ் : இன்னும் இருக்குதே குல்லாக் குரங்கு, சிலந்திக் குரங்கு, அணில் குரங்கு.

இரத்தின : போதும், நிறையச் சொல்லிவிட்டீர்கள். இன்னொரு கேள்வி. குழந்தைகளுக்கு எழுதுவோர் சேர்ந்து சென்னையில் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்களே, அதன் பெயர் தெரியுமா?

விஜி: ஒ, தெரியுமே. குழந்தை எழுத்தாளர் சங்கம். அதன் 31வது ஆண்டு விழாவைக் கூடச் சமீபத்தில்தான் கொண்டாடினார்களே!

இரத்தின: பேஷ், ஆண்டு விழா நடந்ததைக் கூட நினைவில் வைத்திருக்கிறாயே!

... புகையிலையில் ஒருவித நஞ்சு இருக்கிறது. அதன் பெயர் தெரியுமா?

ரவி : நிக்கோடின்.

இரத்தின : கரெக்ட்! அளவுக்கு அதிகமாகப் புகையிலையை உபயோகிப்பவர்களுக்கும், சுருட்டு சிகரெட்டுப் பிடிப்பவர்களுக்கும் புற்று நோய் உண்டாவதற்குக் காரணம், இந்த நஞ்சுதான் என்கிறார்கள்.

அடுத்த கேள்வி. நம் நாட்டின் தேசியப் பறவை மயில். இது உங்களுக்குத் தெரியும். தேசிய மிருகம் எது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/59&oldid=484642" இலிருந்து மீள்விக்கப்பட்டது