பக்கம்:கேள்வி நேரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


...நந்தனாருக்குத் திருநாளைப்போவார் என்று ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயர் எப்படி வந்தது?

விஜி : எனக்குத் தெரியும். என் தாத்தா சொல்லியிருக்கிறார். நந்தனாருக்குச் சிதம்பரத்துத்குப் போய் நடராஜரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாம். ஆனாலும், கோயிலுக்குள்ளே நுழைய விடுவார்களா என்று அவருக்குச் சந்தேகமாம். தினமும் 'நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேன்' என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருப்பாராம். அதனால், அவரை எல்லாரும் நாளைப் போவார்' என்று அழைத்தார்களாம். அதன் பிறகு திருநாளைப் போவார் ஆகிவிட்டதாம்

இரத்தின : அடடே, விஜி அவங்க தாத்தா சொன்னதை நன்றாக நினைவிலே வைத்து அப்படியே சொல்லிவிட்டாளே!...உங்களுக்காகத் தமிழிலே குழந்தைகள் கலைக் களஞ்சியம் பத்துத் தொகுதிகளாக வெளி வந்திருக்கிறதே, அதன் தலைமைப் பதிப்பாசிரியர் யார், தெரியுமா?

சதீஷ் : ம.ப. பெரியசாமித் துரன்.

இரத்தின: சரியான விடை...... ஆங்கிலேயர் ஆட்சியில் முதன் முதலாக மூன்று பல்கலைக் கழகங்கள் மூன்று நகரங்களில் ஏற்படுத்தப்பட்டன. எந்த எந்த நகரங்களில் என்று தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/63&oldid=484646" இலிருந்து மீள்விக்கப்பட்டது