பக்கம்:கேள்வி நேரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


திலக: சரி, நான் சொல்கிறேன். ரவீந்திரநாத தாகூரின் அப்பா தேவேந்திரநாத தாகூர் தான் அதை ஏற்படுத்தினார். அவர் அதை ஒர் ஆசிரமமாகத்தான் அமைத்தார். 1901-ல், அதாவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு, ரவீந்திரநாத தாகூர் அங்கு ஒரு கல்வி நிலையம் அமைத்தார். அது இன்று உலகப் புகழ்பெற்று விளங்குகிறது...... மோகினி ஆட்டம் பார்த்திருக்கிறீர்களா? அது எந்த நாட்டு நடனம்?

கவிதா: பார்த்ததில்லை. கேள்விப்பட்டிருக்கிறோம். அது கேரள நாட்டு நடனம்.

திலக: சரியாகச் சொன்னாய். மோகினி ஆட்டம், கதகளி இரண்டும் கேரளநாட்டு நடனங்கள்... தேக்கு மரத்தால் வீடு கட்ட வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்களே, காரணம் தெரியுமா?

ரங்கநாதன்: தேக்கு மரம் ரொம்ப நாள் உறுதியாக இருக்கும். செல் அரிக்காது; உளுத்துப் போகாது.

திலக: உண்மைதான். சில கோயில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த வாகனங்கள், போட்ட கதவுகள், உத்தரங்களெல்லாம் இன்னமும் நல்ல நிலையில் இருக்கின்றன. சரி, வெட்டுக் கிளிக்கு எத்தனை கால்கள்? சட்டென்று சொல்ல முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/69&oldid=484651" இலிருந்து மீள்விக்கப்பட்டது