பக்கம்:கேள்வி நேரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


ரல்லவா? ஆனால், ஆங்கிலக் கதையை எழுதியவர். கோகுலத்தில்கூடப் படித்தேனே!..ம்...ம். ஸ்விப்ட் என்பவர்தான்.

தேனி: அவரது முழுப் பெயர் தெரியாதா?

கார்த்தி: இதோ சொல்கிறேன். சோமநாதன். இல்லை, இல்லை. ஜொனாதன் ஸ்விப்ட், சரிதானே அண்ணா?

தேனி: ரொம்ப கரெக்ட். Jonathan Swift என்பவர்தான் கலிவரின் பயணங்களை எழுதினவர்...இலங்கைக்கு சிறீலங்கா என்று புதிய பெயர் சூட்டியது எப்போது என்று கூற முடியுமா?

லிங்க : அது குடியரசு நாடானபோது.

தேனி: சரியான விடை. 1972-ஆம் ஆண்டில் அது குடியரசானது. அப்போது சிறீலங்கா என்று பெயர் சூட்டினார்கள்...நம்முடைய ராஜாஜி, பெரியார் இருவரும் 94 ஆண்டுகள் வாழ்ந்தனர். இவர்களைப் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்தார் ஒர் ஆங்கில நாடக ஆசிரியர். அவர் பெயர் தெரியுமா?

சசி : ஷேக்ஸ்பியர்.

தேனி: இல்லை. அவர் 52-ஆம் வயதிலேயே காலமாகி விட்டார். கார்த்தி: பெர்னாட் ஷா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/77&oldid=484658" இலிருந்து மீள்விக்கப்பட்டது