பக்கம்:கேள்வி நேரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


தேனி: ஆம், 50-க்கு மேற்பட்ட ஆங்கில நாடகங்களை எழுதிப் புகழ் பெற்ற ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தான் 94 ஆண்டுகள் வாழ்ந்தவர். சரி, அவர் எந்த ஊரில் பிறந்தார்.

கார்த்தி : லண்டனில்.

தேனி: தவறு. லிங்க : அயர்லாந்தில்.

தேனி அவர் பிறந்தது அயர்லாந்து நாட்டில்தான். ஆனால், நான் கேட்டது எந்த ஊரில் என்றல்லவா?

எல்லோரும் : (மெளனம்)

தேனி: சரி, நானே சொல்லி விடுகிறேன். அவர் பிறந்தது அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில்... ஒரிசா மாநிலத்தின் இப்போதைய தலைநகரம் புவனேஸ்வரம். முன்பு எது தலைநகரமாக இருந்தது?

லிங்க : கட்...

தேனி : என்ன, பாதியிலே கட் பண்ணி விட்டாயே! முழுப் பெயர் நினைவுக்கு வரவில்லையோ?

லிங்க : இதோ வந்து விட்டது. கட்டாக்.

தேனி: சரியான விடை... இந்தியாவின் வாயில் (Gate way of India) என்று எந்த நகரத்தைச் சொல்கிறார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/78&oldid=484659" இலிருந்து மீள்விக்கப்பட்டது