பக்கம்:கேள்வி நேரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


ஆதித் திராவிடர் பள்ளியில்தான் முதல் முதலாக ஆசிரியர் வேலை பார்த்தார். இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இது என்ன என்று தெரிகிறதா?

சசி : உடுக்கு.

தேனி: இல்லை. நன்றாகப் பாருங்கள்.

கார்த்தி : மணற் கடிகாரம்.

தேனி: அடே, கார்த்திக் சரியாகச் சொல்லி விட்டானே! முற்காலத்தில் நிழற் கடிகாரம், நீர்க் கடிகாரம், மெழுகுவர்த்திக் கடிகாரம் என்று பல வகைக் கடிகாரங்கள் இருந்தன. அவற்றிலே ஒன்றுதான் இது. இந்தக் கண்ணாடிப் பாத்திரம் உடுக்கைப் போல் இருக்கிறது மேலே ஒரு கூம்பு, கீழே ஒரு கூம்பு, இரண்டையும் இணைக்கும் இடம் மிகவும் குறுகலாக இருக்கிறது. மேல் கூம்பிலே உலர்ந்த மணலைக் கொட்டி வைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/80&oldid=484661" இலிருந்து மீள்விக்கப்பட்டது