பக்கம்:கேள்வி நேரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


பார்கள். அது ஒரே சீராகக் கீழே உள்ள கூம்பில் விழும். விழுகின்ற மணலின் அளவைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டார்கள்... இப்போது காண்டா மிருகத்தைப் பற்றி ஒரு கேள்வி, அது இவ்வளவு பருமனாக இருக்கிறதே, அது எந்த மிருகத்தை விரும்பிச் சாப்பிடும்?

சசி: ஐயோ, அது மாமிசத்தையே தொடாதே! புல், பூண்டு, தழைகளைத்தான் தின்னும்.

தேனி : சசிகலா சரியாகச் சொன்னாள். சென்னையில் கன்னிமாரா நூல் நிலையம்' என்று ஒரு பெரிய நூல் நிலையம் இருக்கிறதே, இதற்கு இப்பெயர் எப்படி வந்தது?

கார்த்தி : வெள்ளைக்காரர்கள் கன்னி மேரி நூல் நிலையம்' என்று பெயர் வைத்திருப்பார்கள். அதுதான் கன்னிமாரா' என்று. மாறிவிட்டது.

தேனி: விடை தவறு. ஆனால் நல்ல கற்பனை. சசி, லிங்கராஜ், உங்களுக்குத் தெரியுமா?

இருவரும் : தெரியாது.

தேனி : கன்னிமாரா என்ற ஆங்கிலேயர் சென்னையில் கவர்னராயிருந்தார். அவர் பெயரால் 1896ல் தொடங்கப்பட்டதுதான் கன்னிமாரா நூல் நிலையம்'...இப்போது சில அரசியல் தலைவர்கள் நெடுந்தூரம் பாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/81&oldid=484662" இலிருந்து மீள்விக்கப்பட்டது