பக்கம்:கேள்வி நேரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


என்று ஒரு பத்திரிகையை நடத்தினார். அதுதான் அவருடைய முதல் பத்திரிகை, சர் ஜசக் என்று தொடங்கும் பெயர்களில் இரண்டு பேர் உலகப் புகழ் பெற்றிருக் கிறார்கள். அவர்களின் பெயர்கள் தெரியுமா ?

ஜெயா : சர் ஐசக் கியூட்டன். புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தவர். இன்னொருவர்... இன்னொருவர்....

அலமேலு: தலையைச் சொறிகிறாயே, சரி வேறு யாருக்காவது தெரியுமா ?

எல்லோரும் : (மெளனம்).

அலமேலு : இன்னொருவர் சர் ஐசக் பிட்மென். பிட்மென், சுருக்கெழுத்துக் கண்டு பிடித்தவர். பிட்மென் ஷார்ட் ஹாண்ட் (Pitman's shorthand) என்று கேள்விப்பட்டிருப்பீகளே! சரி, யூக்கலிப்டஸ் அதாவது நீல கிரித் தைலம் என்கிறோமே, அந்தத் தைலத்தை எதிலிருந்து எடுக்கிறார்கள்?

ஜெயா : யூக்கலிப்டஸ் மரப் பட்டையிலிருந்து.

அலமேலு : இல்லை, ஜெயா விடை தவறு.

கிரி : யூக்கலிப்டஸ் இலையிலிருந்துதான் தைலம் எடுக்கிறார்கள்.

3085-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/87&oldid=484667" இலிருந்து மீள்விக்கப்பட்டது