பக்கம்:கேள்வி நேரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


ஜெயா : எனக்குத் தெரியும். பாம்புக்கும் தவளைக்கும் முதுகு எலும்பு உண்டு; நத்தைக்கும் கரப்பானுக்கும் முதுகு எலும்பு இல்லை.

அலமேலு: ஆஹா ஜெயா எவ்வளவு சரியாய்ச் சொல்லிவிட்டாள்! சரி, Unicef என்றால் என்ன?

கிரி : அடிக்கடி டி. வி. யில் காட்டுகிறார்கள். United Nations international Children’s Fund என்பதைத்தான் அப்படிச் சுருக்கிச் சொல்கிறார்கள்.

அலமேலு : கிட்டத்தட்டச் சரியாகச் சொல்லி விட்டாய். கிட்டத்தட்ட' என்று ஏன் சொல்கிறேன், தெரியுமா? நீ சொன்ன ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்தை எடுத்துக்கொண்டால் Unicf என்றுதானே வரும்? 'E' என்ற எழுத்து விடுபட்டுப் போகிறதே!

கிரி : ஆமாம் அக்கா. இதோ நான் சரியாய்ச் சொல்கிறேன். United Nations international Children's Emergency Fund.

அலமேலு : கரெக்ட். ஆனாலும் Emergency என்பதை மட்டும் பிராக்கெட்டுக்குள் அதாவது அடைப்புக் குறிக்குள் போடுகிறார் கள். ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/89&oldid=484669" இலிருந்து மீள்விக்கப்பட்டது