பக்கம்:கேள்வி நேரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


சரவணன்: முன் காலத்தில் அநேகமாக ஒவியங்களை யெல்லாம் சுவர்களிலே எழுதினார்கள். அதனால்தான் அந்தப் பழமொழி.

அலமேலு : உண்மைதான். முன்காலத்தில் பெரும்பாலும் சுவர்களில்தான் சித்திரங்கள் எழுதப்பட்டன. கோயில்கள், அரண்மனைகள், சித்திர மாடங்கள் இப்படி எல்லாவற்றிலும் சுவர் ஒவியங்கள் எழுதப்பட்டன. ஆனால் இப்போதுதான் துணிகளிலும் தாள்களிலும் பலகைகளிலும் சித்திரங்களை வரைகிறார்களே!...நேரு மாமாவின் கூடப் பிறந்த இரண்டு சகோதரிகளின் பெயர்கள் தெரியுமா?

ஜெயா: ஒருவர் பெயர் விஜயலட்சுமி பண்டிட்... இன்னொருவர் பெயர்...சுசேதா கிருபலானி.

அலமேலு : ஜெயா, முதலில் சொன்ன பெயர் சரிதான். ஆனால், இரண்டாவது பெயர் தவறு.

கிரி : நான் சொல்கிறேன். கிருஷ்ணா.

அலமேலு : கிருஷ்ணா என்பது சரிதான். ஆனால், அவரது முழுப் பெயர் திருஷ்ணா ஹத்திசிங், மக்காவிற்குப் புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு ஒரு பட்டம் வழங்கப் படுகிறது. அது என்ன பட்டம் !

சரவணன்: ஹாஜி என்ற பட்டம்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/91&oldid=484671" இலிருந்து மீள்விக்கப்பட்டது