பக்கம்:கேள்வி நேரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


இதுதான்...மறைமலை அடிகள் மிகப் பெரிய தமிழறிஞர் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய இயற்பெயர் என்ன?

சரவணன்: வேதாசலம்.

அலமேலு: சரியான விடை. வேதம் = மறை, அசலம் = மலை. இரண்டையும் சேர்த்தால் மறைமலை. அவரை சுவாமி வேதாசலம் என்று பலரும் மரியாதையோடு அழைத்து வந்ததால், மறைமலை அடிகள் என்று பின்னர் அழைத்தார்கள்...ஐதராபாத் எங்கே உள்ளது என்று கேட்டால், ஆந்திர மாநிலத்தில் என்று உடனே கூறி விடுவீர் கள். இன்னோரிடத்திலும் ஐதராபாத் என்ற பெயரில் ஒரு நகரம் இருக்கிறது. எங்கே என்று தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்)

அலமேலு: ஒருவருக்கும் தெரியவில்லையே! பாகிஸ்தானில் சிந்து நதியின் மேற்குக் கரைக்கு அருகிலே ஒரு குன்று இருக்கிறது. அதன் மேல்தான் இருக்கிறது, இன்னொரு ஐதராபாத் நகரம்... காந்தி புராணம்' என்ற கவிதை நூலை ஓர் அம்மையார் பாடியிருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?

ஜெயா : செளந்தரா கைலாசம். அலமேலு இல்லை. ஒரு குறிப்புத் தருகிறேன். அந்த அம்மையாரின் முன்னால் பண்டிதை என்ற பட்டம் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/96&oldid=484676" இலிருந்து மீள்விக்கப்பட்டது