பக்கம்:கேள்வி நேரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


சரவணன் : உம்........ கேள்விப்பட்டிருக்கிறேன். பண்டிதை அசலாம்பிகை அம்மையார்.

அலமேலு : சரியாகச் சொன்னாய். காந்தி புராணம் மட்டுமல்ல, திலகர் புராணம்’ என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இன்னும் பல தல புராணங்களும் எழுதியிருக்கிறார்.

கிரி சங்கர், நீ கப்பல் பார்த்திருக்கிறாயா ?

கிரி : ஒ, பார்த்திருக்கிறேனே! அலமேலு எப்போது பார்த்தாய் ! எங்கே பார்த்தாய் ?

கிரி: போன கோடை விடுமுறையிலேதான் நான் கப்பலைப் பார்த்தேன். மிகப் பெரிய கப்பல். உள்ளேயெல்லாம் கூட என்னை என் மாமா அழைத்துப் போய்க் காட்டினார்.

அலமேலு : ஒ, அப்படியா ! எங்கே பார்த்தாய் என்று கேட்டேனே ? கிரி : என் மாமா டில்லியில்தானே இருக்கிறார் ! கப்பலை டில்லியில்தான் பார்த்தேன். (மற்றவர்கள் சிரிக்கிறார்கள்.)

கிரி : (கோபமாக) ஏன் சிரிக்கிறீர்கள் !

அலமேலு : கிரி, கோபப்படாதே ! டில்லியில் கடலே கிடையாது. கப்பலை எப்படிப் பார்த்திருப்பாய் ! (மற்றவர்கள் மேலும் சிரிக்கிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/97&oldid=484677" இலிருந்து மீள்விக்கப்பட்டது