பக்கம்:கேள்வி நேரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


பால நடராஜன்: நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு தந்தையும் மகனும் ஒரே நாளில் சிறைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் யார், யார் என்று தெரியுமா?

பத்மஜா: நேரு மாமாவும் அவரது தந்தை பண்டித மோதிலால் நேருவும்.

பால: அடே, பத்மஜா சரியாகக் கூறி விட்டாளே! 6.12-1921ல் இரு வரையும் ஆங்கிலேயர் கைது செய்தார்கள். சரி, நான்கு வேதங்கள் என்று சொல்கிறார்களே, அவை யாவை ?

சுப்பிரமணியன் : ரிக்வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வ வேதம்.

பால: சரியாகச் சொன்னாய்...நம்; நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முதல் முதலாகச் சிறை சென்ற பெண்மணி யார்?

இராஜலெட்சுமி : சரோஜினி தேவி.

பால ரொம்ப சரி. உலகிலுள்ள பறவைகளிலே மிகப் பெரியது எது?

பத்ம : வான்கோழிதானே?

பால : இல்லை.

சுப்பிர : நெருப்புக்கோழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/99&oldid=484678" இலிருந்து மீள்விக்கப்பட்டது