98 / புலவர் செ.இராசு
தீர்த்தங்கரர் உருவம் மேலும், அதன் கீழ் புளிஅப்பை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்த பக்கத்தில் அந்நிகழ்ச்சியைக் குறிக்கும் கல்வெட்டும் உள்ளது.
கோவிராசகேசரி குலோத்துங்க சோழன் என்னும் கொங்குச் சோழ மன்னனின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு நிசீதிகைக் கல்லின் வடக்கு, மேற்குப் பக்கங்களில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சகரயாண்டு 1085இல் பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.பி.1163ஆம் ஆண்டுக்குரிய கல்வெட்டாகும்.188
விசயமங்கலம் வீரசங்காதப் பெரும்பள்ளியுடைய தேவருக்கு மூன்று கலநெல் விதை விதைக்கக்கூடிய நிலம் கொடையாக அளிக்கப்பட்டதை அக்கல்வெட்டுக் கூறுகிறது. அந்நிலத்தின் வருவாயிலிருந்து தேவ காலால் நான்கு நாழி நெல் அமுதுபடிக்குக் கொடுக்கப்பட்டது. இருங்கோள நாட்டார் காவலில் நிலம் கொடையாக விடப்பட்டது என்ற விவரம் தெரிகிறது.
கொங்கு அரசர் ஒருவரின் 46ஆம் ஆட்சியாண்டில் சகர யாண்டு 1189இல் (கி.பி.1267) விசயமங்கலத்தில் உள்ள படைத்தலை வேளாளர்களில் திருவானைக்காவுடைய சொக்கன் என்பவன் வாத்திய மண்டபத்தில் கிழக்கு வாயில் நிலை செய்வித்ததாக இடப்பக்க நிலைக்கல்வெட்டுக் கூறுகிறது.189
அதே வாயிலில் வலது நிலையில் உள்ள கல்வெட்டில் கார்த்திகைத் திங்களில் வேளிரையும், தேவராசாரியரையும், தோழன்மாரையும் எழுந்தருளுவித்து விஷு அயன சங்கராந்திக்கு ஆறு நாழியும், திருக்கார்த்திகைக்கு 12 நாழியும் அமுதுபடிக்கு அளித்ததைக் கூறுகிறது. இரண்டு திருவிளக்கு ஏற்ற வேண்டும் என்றும் இக்கொடை ஸ்ரீ வத்சகோத்திரத்தில் சிலவர் பிள்ளை பெரிய நாட்டில் பண்டிதப் பெருமாள் கெங்கை ஆழ்வார் வசம் அளிக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இதற்காக ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு 2 கொடுக்கப் பெற்ற செய்தியும் தெரிவிக்கப் பெற்றுள்ளது.190
கோயிலின் கிழக்குச் சுவருக்கு வெளியே கோயிலுக்குரிய தீர்த்தக்கிணறான பீம தீர்த்தக் கிணற்றில் இரண்டு கல்வெட்டுத் துண்டுகள் உள்ளன.
கொங்குப் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் 27ஆம் ஆட்சியாண்டு சகரயாண்டு 1210இல் (கி.பி. 1288) வடகரைநாட்டு வெள்ளாளன்