உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 / புலவர் செ.இராசு

1. சிக்கபெட்டா எனப்படும் சிறியமலை ‘சந்திரகிரி’ என அழைக்கப்படுகிறது. அப்பெயர் சந்திரகுப்தன் பெயரால் ஏற்பட்டது என்பர்.17
2. சந்திரகிரியில் உள்ள ஒரு குகை ‘பத்திரபாகு குகை’ எனக் கூறப்படுகிறது. அங்குப் பத்திரபாகுவின் திருவடிகள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. அங்குதான் பத்திரபாகு சல்லேகனை விரதமிருந்து உயிர் நீத்தார் என்பர். அதைக் குறிக்கும் பிற்காலக் கல்வெட்டுகளும் உள்ளன.18
3.சந்திரகிரி மலையில் ‘சந்திரகுப்த பசதி’ என்ற சமணப்பள்ளி உள்ளது. அது சந்திரகுப்தன் உயிர்நீத்த இடத்தில் கட்டப்பட்ட நினைவுப்பள்ளி ஆகும்.19
4. பத்திரபாகு, சந்திரகுப்தன் ஆகியோர் மகத நாட்டிலிருந்து சிரவணபெளகொளா வருகை புரிந்த வரலாற்று நிகழ்ச்சிகள் 90 கற்சிற்பங்களாகத் தொடர்ந்து வெட்டப்பட்டுள்ளன.20
6.சந்திரகிரியில் உள்ள பார்சுவநாத பசதியின் வலப்புறப் பாறையில் பிரபசந்திர முனிவர் என்பவர் சல்லேகனை விரதமிருந்து உயிர் நீத்ததைக் குறிக்கும் பழங்கன்னடக் கல்வெட்டின் முற்பகுதியில் பத்திரபாகு முனிவர் சிரவணபெளகொளா வந்த செய்தி விவரமாகக் கூறப்பட்டுள்ளது.21 அங்குள்ள வேறு சில பிற்காலக் கல்வெட்டுகளும் மேற்கண்ட நிகழ்ச்சியைச் சுட்டிக் கூறுகின்றன. பல இடங்களில் பத்திரபாகு, சந்திரகுப்தன் பெயர்கள் இணைந்து காணப்படுகின்றன.22
6.அரிசேனரின் ‘பிருகத்கதாகோசம்’, யதி விருசபரின் ‘திலோத பண்ணத்தி’, இரத்தினநந்தியின் ‘பத்திரபாகு சரிதம்’, சித்தானந்தகவியின் ‘முனிவம்சாப்யுதம்’, தேவ சந்திராவின் ‘இராஜாவளி சரிதம்’ போன்ற பல பிற்கால இலக்கியங்களில் பத்திரபாகு, சந்திரகுப்தன் ஆகியோரின் சிரவணபெளகொளா வருகை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.23

மேற்கண்டவை அனைத்தும் பிற்காலச் சான்றுகளே ஆயினும் அவ்விரு சமணப் பெரியார்களின் சிரவணபெளகொளா வருகையைச் சுட்டப் போதுமான ஆதாரங்களாக உள்ளன என்றே வரலாற்றுப் பேராசிரியர்கள் எண்ணுகின்றனர்.24

கொடுமணல் தொல்பொருளும் இலங்கைக் கல்வெட்டும்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் என்னும் ஊர் உள்ளது. பதிற்றுப்பத்தில்