உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 / புலவர் செ.இராசு

சமணம் பரவுமுன் தமிழ்நாட்டிலும் குறிப்பாகக் கொங்குநாட்டிலும் சமணம் பரவியிருந்தது என்பது தெரிகிறது.

2.2. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சத்தில் பாண்டுகாயபன் (கி.மு. 377–307) என்னும் இலங்கையரசன் அனுராதபுரத்தில் சமண முனிவர்களுக்காகப் பள்ளியும், வீடுகளும் கட்ட ஆணையிட்டான் என்று கூறப்படுகிறது.46 சமண முனிவர்கள் பெயர் நிகண்டகிரி, நிகண்ட ஜோதிய என்றும், சமணப் பள்ளியின் பெயர் நிகண்ட கும்பண்ட என்றும் கூறப்படுகிறது.
3.தீபவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூலிலும் இச்செய்தி கூறப்படுகிறது. நிகண்ட சாதுக்களுக்குப் பள்ளி கட்டிய செய்தியும் கூறப்படுகிறது.47

நீண்ட கடற்பயணம் செய்யக்கூடாது என்பது சமணர் கொள்கை. அதனால் தமிழ்நாடு மூலமாகவே இலங்கைக்குச் சமணம் சென்றிருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.48

ஒத்த நிகழ்ச்சி

மகத நாட்டில் பஞ்சம் காரணமாக மக்கள் நாட்டைவிட்டு வெளியேறித் தென்னிந்தியா வந்து தங்கிப் பஞ்சம் நீங்கியவுடன் மீண்டும் சமணர்கள் பலர் தம் தாயகம் திரும்பினர்.

தமிழ்நாட்டில் இச்செய்தியை நினைவூட்டும் வகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி சுட்டிக் கூறப்படுகின்றது. அதன் மூலம் மகத நாட்டுச் சமணர்கள் குடிபெயர்ந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்திருந்தது என எண்ணலாம்.

நாலடியார் வரலாறு

வடநாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக 8000 சமண முனிவர்கள் பாண்டி நாட்டை அடைந்தனர்.49 பாண்டிய மன்னன் அவர்களை ஆதரித்து உபசரித்தான். சமண முனிவர்கள் தம் நாட்டில் மழை பெய்து வளம் ஏற்பட்டவுடன் மீண்டும் தம் நாடு செல்ல விரும்பினர். பாண்டிய மன்னனுக்குச் சமண முனிவர்களை அனுப்ப மனமில்லை.

ஒருநாள் இரவு 8000 சமணர்களும் ஆளுக்கொரு பாடலை எழுதிவைத்துவிட்டு அரசனிடம் சொல்லாமல் புறப்பட்டனர்.

காலையில் சமண முனிவர்களைக் காணாது திகைத்த அரசன் அவர்கள் பாடல் எழுதி வைத்த ஓலைகளை ஆற்றில் எறிய ஆணை-