பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91




தகடூரிப் போரைப் பற்றித் தகடூர் யாத்திரை என்னும் நூல் இருந்தது. அது சென்ற 19ஆம் நூற்றாண்டில் மறைந்து விட்டது.[1]


பெருஞ்சேரலிரும்பொறை தன் ஆட்சிக் காலத்தில் சில நாடுகளைக் கைப்பற்றித் தன்னுடைய இராச்சியத்தைப் பெரிதாக்கினான். அவன் தன்னை 8ஆம் பத்தில் பாடிய அரிசில் கிழாரைத் தன்னுடைய அமைச்சராக்கினான்.[2]


வெற்றிகளைப்பெற்ற பெருஞ்சேரலிரும்பொறை தன்னுடைய குலதெய்வமாகிய அயிரை மலைக் கொற்றவையை வழிபட்டு வணங்கினான். தான் வென்ற பகையரசரின் யானைகளுடைய தந்தங்களை அறுத்து அந்தத் தந்தங்களினால் கட்டில் (ஆசனம்) செய்து அதன்மேல் கொற்றவையை இருத்தித் தன்னுடைய வெற்றி வாளில் படிந்துள்ள இரத்தக் கறையைக் கழுவினான். இவ்வாறு வெற்றிவிழாக் கொண்டாடுவது அக்காலத்து - வழக்கம். இச்செய்தியை இவனே 8 ஆம் பத்தில் பாடியவரும் இவனுடைய அமைச்சருமாகிய அரிசில் கிழார் கூறுகிறார்.[3]


இவ்வரசன் தெய்வ பக்தியுள்ளவன், அறநெறியறிந்தவன். தன்னுடைய வயது சென்ற புரோகிதனுக்கு அறதெறி கூறி


  1. * (இது பற்றி மயிலை. சீனிவேங்கடசாமி எழுதிய மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்னும் புத்தகத்தில் காண்க.)
  2. ** (8 ஆம் பத்து பதிகச் செய்யுள்)
  3. "கொல் களிற்றியானை யெருத்தம் புல்லென, வில்குலை யறுத்துக் கோலின் வாரா, வெல்போர் வேந்தர் முரசு கண் போழ்ந்தவர், அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய, அணங்குடை மரபிற் கட்டின் மேலிருந்து, தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து, நிறம்படு குருதி புறம்படின் அல்லது, மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபில், கடவுள் அயிரை." (8 ஆம் பத்து 9:10-18)