பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96




இருக்க முடியும்? நீலகண்ட சாஸ்திரி இவ்வாறெல்லாம் தன் மனம் போனபடி கற்பனை களைச் செய்துள்ளார்..[1]

அந்துவன், அந்துவஞ்செள்ளை என்பதில் 'அந்துவன்' என்னும் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இவர் இப்படியெல்லாம் ஊகஞ் செய்கிறார். இதற்குக் காரணம் செல்வக் கடுங்கோ வழியாதனுக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தார்கள் என்பதை இவர் அறியாததுதான்.

பெருஞ்சேரல் இரும்பொறையும், குட்டுவன் இரும் பொறையும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பதையறிந்தோம். குட்டுவன் இரும்பொறை அந்துவஞ் செள்ளையை (மையூர்கிழான் மகளை மணஞ் செய்து இருந்ததையும் இவர்களுக்கு இளஞ்சேரல் இரும்பொறை என்னும் மகன் இருந்ததையும் (9-ஆம் பத்து பதிகம்) அறிந்தோம். பெருஞ்சேரல் இரும்பொறை. தகடூர்ட் போரைச் செய்த காலத்தில் அவன் தம்பியாகிய குட்டுவன் இரும்பொறை உயிர் வாழ்ந்திருந்தான். இதைத் தகடூர் யாத்திரைச் செய்யுள்களினால் குறிப்பாக அறிகிறோம்.


'

சால வெகுளிப் பொறைய கேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறி.
'

(புறத்திரட்டு-776. தகடூர் யாத்திரை)


இந்தச் செய்யுளில் பொறையன் என்பது பெருஞ்சேரல் இரும்பொறையை, நும்பி என்றது அவனுடைய தம்பி யாகிய குட்டுவன் இரும்பொறையை. இதனால், தகடூர்ப் போர் நிகழ்ந்த காலத்தில் எக்காரணம் பற்றியோ இவ்விரு


  1. * P. 506, 507, 526, 540. A Comprehensive History of India Vol. II Edited by K. A. Nelakanta Sastri 1957.