பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

இளஞ்சேரல் இரும்பொறை

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு கொங்கு இராச்சியத்தை அரசாண்டவன் அவனுடைய தம்பியின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்று கூறினோம். இவன் பதிற்றுப் பத்து ஒன்பதாம் பத்தின் தலைவன்.

இளஞ்சேரல் இரும்பொறையைக் குடக்கோ இளஞ் சேரல் இரும்பொறை என்றும் சேரமான் குடக்கோ இளஞ் சேரல் இரும்பொறையென்றும் கூறுவர். இவன் கொங்கு நாட்டின் அரசன் என்றும் பூழிநாடு, மாந்தை நகரம், கட்டூர், தொண்டி இவைகளின் தலைவன் என்றுங் கூறப்படுகிறான்.[1]

கட்டூர் என்பதற்குப் பொதுவாகப் பாசறை என்பது பொருள். ஆனால் இங்குக் கூறப்பட்ட கட்டூர் என்பது புன்னாட்டின் தலைநகரமான கட்டூர். பிற்காலத்துச் சாசனங்களில் இவ்வூர் கிட்டூர் என்று கூறப்படுகிறது. புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் இப்போது மைசூருக்குத்

  1. நாரரி நறவிற் கொங்கர் கோவே. (9-ஆம் பத்து 8:19) “கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே, மட்டப் புகர்விற் குட்டுவர் ஏறே, எழாத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை, இலங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந, வெண்பூ வேளையொடு சுரை தலை மயக்கிய விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே” (9-ஆம் பத்து 10:25-30) “வளைகடல் முழவில் தொண்டியோர் பொருந்” (9-ஆம் பத்து 8:21)