பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

இதிலிருந்து சோழன் தோற்றுப் போன செய்தி தெரிகிறது. சோழன் பெரும்பூண் சென்னியுடன் போர் செய்து வென்ற பிறகு இளஞ்சேரல் இரும்பொறை இன்னொரு சோழனுடன் போர் செய்தான்.

இளஞ் சேரலிரும்பொறை பெருஞ்சோழன் என்பவனையும் இளம்பழையன் மாறன் என்பவனையும் வென்றான்.[1] இந்தப் பெருஞ்சோழன் என்பவன் வேறு, மேலே சொன்ன பெரும் பூண் சென்னி வேறு என்று தோன்றுகிறது. இளம்பழையன் மாறன் என்பவன், கட்டுப் போரில் முன்பு இறந்து போன பழையன் என்னும் சேனாதிபதியின் தம்பியாக இருக்கலாம். (இந்தப் பழையன் மாறனுக்கும் பாண்டி நாட்டில் மோகூரில் இருந்த பழையன் மாறனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இவன் வேறு, அவன் வேறு.)

இளஞ்சேரல் இரும்பொறை சோழ நாட்டில் சென்று சோழனுடன் போர் செய்து வென்றான் என்றும் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் காவல் தெய்வங்களாக இருந்த சதுக்கப்பூதம் என்னுந் தெய்வங்களைக் கொண்டு


  1. இந்தச் செய்யுளின் பழைய உரை இதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறது. “இளஞ்சேரலிரும்பொறை, சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச்சென்னியர் பெருமானை எம்முன்னே பிடித்துக்கொண்டு வந்து தம்மினெனத் தம்படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல் ......கபிலன் பெற்ற ஊரினும் பல.” “பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று” (9 ஆம் பத்து பதிகம்)