பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

னிலும் அறநெறி அறிவானாகப் பண்ணி " என்று இதன் பழைய உரை கூறுகிறது.[1]

(புலவர் பெருங்குன்றூர் கிழார் இவ்வரசனிடம் பரிசு பெறச் சென்றார். இவன் பரிசு கொடுக்காமல் காலந் தாழ்த்தினான். பலநாள் காத்திருந்தும் பரிசு வழங்கவில்லை, அப்போது இப்புலவர் வருந்திப் பாடிய இரண்டு செய் யுட்கள் (புறம் 210, 211) இவருடைய வறுமைத் துன்பத்தைத் தெரிவிக்கின்றன.) பரிசு கொடுக்காமல் காலந் தாழ்த்தின இவ்வரசன் இப்புலவருக்குத் தெரியாமல் ஊர் வீடு நிலம் முதலியவற்றை அமைத்துப் பிறகு இவருக்குக் கொடுத் தான். 'அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்த ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையோடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக்' கொடுத்தான் என்று ஒன்பதாம் பத்துப் பதிகக் குறிப்பு கூறுகிறது.

பெருங்குன்றூர் கிழார்) இளஞ்சேரல் இரும்பொறை மீது ஒன்பதாம் பத்துப் பாடினார். அதற்கு அவன் முப்பத்தீராயிரம் பொற்காசு வழங்கினான். “பாடிப் பெற்ற பரிசில் மருளிலார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்தான் அக்கோ" என்று பதிகத்தின் கீழ்க் குறிப்பு கூறுகிறது.


  1. * (மையூர்கிழானைப் பற்றியும் அவன் மகள் அந்துவஞ் செள்ளையைப் பற்றியும் திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி பல யூகங்களைக் கூறித் தவறு செய்கிறார். அந்துவனுக்கு (அந்துவன் பொறையனுக்கு) மைபூ: கிழான் என்று பெயர் உண்டு என்றும் அந்துவன் பொறையனே அமைச்சனான மையூர்கிழான் என்னும் பெயருடன் இருந்தான் என்றும் இல்லாததைப் புனைந் துரைக்கிறார்.P. 506, 507, 526. A Compreliensive History of India. Vol II Edited by K. A. Nilakanta Sastri 1957)