பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்!

"*[1]


- இதில், சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன்” என்றது இளஞ்சேரல் இரும் பொறையை. இளஞ்சேரல் இரும்பொறை, தன்னுடைய தாயாதிப் பெரிய தந்தையான சேரன் செங்குட்டுவன் இருக்கும்போதே, அவன் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமேயே இறந்து போனான் என்பது நன்கு தெரிகின்றது, இந்த உண்மையை யறியாமல் சேரன் செங்குட்டுவன் காலத் துக்குப் பிறகு இளஞ்சேரல் இரும்பொறை வாழ்ந்திருந்தான் என்று திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுவது தவறாகும். செங்குட்டுவன் உத்தேசமாக கி. பி. 180 லும், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசம் கி. பி. 190 இலும் இருந்தனர் என்று இவர் எழுதியுள்ளார்.[2] செங்குட்டுவன் காலத்திலேயே இறந்து போன குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை, செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகும் எப்படி வாழ்ந்திருக்கமுடியும்? செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்த காலத்தில் இவன் இல்லை.


இலங்கையரசனான முதலாம் கஜபாகுவின் சமகாலத் தவனான செங்குட்டுவன், கஜபாகுவுக்கு வயதில் மூத்தவனாக இருந்தான், இவன் தன்னுடைய 50 ஆவது. ஆட்சி


  1. * (சிலம்பு, நடுகல் 147-150)
  2. ** (P. 522, 539. A Comprehensive History of India Vol. II, 1957, P. 119. A. History of South India 1955) சாஸ்திரியைப் போலவே கே. ஜி. சேஷையரும் எழுதியுள்ளார். (P. 52. Cera kings of the Sangam Period. K. G. Sesha Aiyer 1937.)