பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

ஏழாம் பத்துப் பாடினார்.) தன்னைப் பாடுவதற்கு இப்போது கபிலர் இல்லையே என்று இவன் வருந்தியதைக் கண்டு பொருந்தில் இளங்கீரனார், சுபிலரைப் போலவே நான் உன்னைப் பாடுவேன் என்று கூறினார்.

“செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த வேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயின் நன்றுமன் என்றதின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவல் மன்னால் பகைவரைக் கடப்போ”[1]

புலவர் இளங்கீரனார் இவ்வாறு கூறிய பிறகு இவன் மேல் ஒரு பத்துச் செய்யுட்களைப் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் பத்து, பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்தாக இருக்கவேண்டும். பத்தாம்பத்து இப்போது கிடைக்க வில்லை. அது மறைந்து போயிற்று.

யா. சே. மா. சே. இரும்பொறைக்கும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர் நடந்தது. அந்தப் போர் எந்த இடத்தில் நடந்ததென்று தெரியவில்லை. அந்தப் போரில் இவன் வெற்றியடைவது திண்ணம் என்று இவன் உறுதியாக நம்பினான். ஆனால், இவனுக்குத் தோல்வி ஏற்பட்டது, சோழன் வென்றான். சோழனுடைய வெற்றிக்கும் இவனுடைய தோல்விக்கும் காரணமாக இருத்தவன் மலையமான் அரசனாகிய தேர்வண்மலையன் என்பவன். போர் நடந்தபோது தேர்வண்மலையன் சோழனுக்கு உதவியாக வந்து இவனைத் தோல்வியுறச் செய்தான். இந்தச் செய்தியைப் புறநானூறு 125-ஆம் செய்யுளினால் அறிகிறோம். இந்தச்


  1. *(புறம்-53: 11-15)