இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120
லிருந்த காரணம், தனக்கு, வெளியிலிருந்து வரவேண்டிய அரசரின் உதவியை எதிர்பார்த்திருந்ததுதான். இவன் எதிர் பார்த்திருந்த உதவி கிடைத்த பிறகு, இவன் கிள்ளிவளவனுடன் போர் செய்தான். போரின் முடிவு, அவனுக்குத் தோல்வியாக இருந்தது; சோழன் கிள்ளி வளவனே வென்றான்.
போரில் கருவூர்க் கோட்டையைக் கிள்ளி வளவன், தீயிட்டுக் கொளுத்தினான். மாடமாளிகைகள் எரிந்து விழுந்தன.[1]
சோழன்,கொங்குநாட்டின் தலைநகரை வென்றபடியால், கொங்கு நாடு முழுவதையுமே வென்றான் என்பது பொருளன்று. கோவூர் கிழார் கிள்ளி வளவனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடினார். [2]வஞ்சி—கருவூர், குடபுலம்—கொங்கு நாடு. இந்தச் செய்யுளின் அடிக் குறிப்பு, “சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் கருவூரெறிந்தானைப் பாடியது" என்று கூறுகிறது. மாறோக்கத்து நப்பசலையாரும் சோழனுடைய கருவூர் வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார். [3]
- ↑ “வேந்து புறங்கொடுத்த வீய்ந்துகு பறந்தலை, மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு, உருமு எறி மலையின் இருநிலஞ்சேர” (புறம். 373:19-21)
- ↑ “கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே” என்றும், “வஞ்சி முற்றம் வயக்களனாக, அஞ்சா மறவர் ஆட்போர் பழித்துக், கொண்டனை பெரும குடபுலத்ததரி” என்றுங் கூறுகிறார். புறம் 373.
- ↑ “எழு சமங்கடந்த எழுவுறழ் திணிதோள், கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ, யாங்கன மொழிகோ யானே ஓங்கிய, வரையளந்தறியாப் பொன்படு நெடுங்கோட்டு, இமயஞ் சூட்டிய ஏமவிற்பொறி, மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய, வாடாவஞ்சி நாட்டு நின், பீடுகெழு நோன்றாள் பாடுங்காலே.” (புறம் 39:11-18) இமயஞ்சூட்டிய ஏமவிற்பொறி—சேர அரசரின்