பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


பிற்காலத்து நூலாகிய கலிங்கத்துப் பரணி இதைக் கூறு கிறது. பொய்கையார் கள வழி பாடின பிறகு அதைக் கேட்டுச் சோழன் கணைக்கா லிரும்பொறையை விடுதலை செய்தான் என்று அந்நூல் கூறுகிறது.[1]

களவழி நாற்பது : செங்கட் சோழனைச் செங்கண்மால் (செய்யுள் 4, 5, 11) என்றும் செங்கட்சினமால் (செய்யுள் 15, 21, 29, 30, 40) என்றும் செம்பியன் (சோழன்) (செய்யுள் 6, 23, 33, 38) என்றும் சேய் (செய்யுள் 13,18) என்றும் பைம்பூட்சேய் (செய்யுள் 34) என்றும் கூறுகிறது. தோற்றுப்போன கணைக்கா லிரும்பொறையின் பெயரைக் கூற வில்லை. 'கொங்கரை அட்டகளத்து' என்றும் (செய்யுள் 14) 'புனநாடன் வஞ்சிக்கோ ' என்றும் (செய்யுள் 39) கூறுகிறது.


கணைக்கா லிரும்பொறைக்கும் செங்கட் சோழனுக்கும் இரண்டு இடங்களில் போர்கள் நடந்தன. கழுமலம் என்னும் ஊரிலும் பிறகு போர் என்னும் ஊரிலும் நடந்தன. கொங்கு நாட்டுக் கழுமலத்தில் செங்கணான் போரை வென்றான். இதைக் 'காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்' (செய். 36) 'புனல் நாடன் வஞ்சிக்கோ அட்டகளத்து' (செய். 39) என்பதனால் அறிகிறோம். கழுமலப் போரில் தோற்ற கணைக்காலிரும்


  1. * 'களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட அவனும்' தாழிசை-18, (கலிங்கத்துப் பரணி, இராசபாரம்பரியம்) உதியன்-சேரன், இங்குக் கணைக்கா லிரும்பொறையைக் குறிக்கிறது. கால்வழித்தளை-காலில் இடப்பட்ட விலங்கு.