பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


சங்க காலத்துக் கொங்குநாட்டு வரலாறு கணைக்கால் இரும்பொறையோடு முடிவடைகிறது. சேரஅரசர் பரம்பரையில் இளைய வழியினரான பொறையர் கொங்கு நாட்டை ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் ஏறத்தாழ இருநூறு ஆண்டு அரசாண்டார்கள். அவர்களில் கடைசி அரசன் கணைக்கால் இரும் பொறை. கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானுக்குக் கீழடங்கிக் கொங்கு நாட்டை யரசாண்டான். ஆனால், சோழர் கொங்கு நாட்டை நெடுங்காலம் அரசாளவில்லை. ஏறத்தாழக் கி. பி. 250-ல் தமிழகத்தை களப்பிரர், அல்லது களப்பாளர் என்னும் பெயருள்ள அயல்நாட்டு அரசர் கைப் பற்றிக்கொண்டு அரசாண்டார்கள், களப்பிறர், சேர சோழ பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஏறத்தாழ முந்நூறு ஆண்டு அரசாண்டார்கள். அப்போது கொங்குநாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருக்க வேண்டும். களப்பிரர் ஆட்சிக் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகத் தெரிகிறது,