பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

நாட்டுச் சேர அரசர் அரசாண்ட காலத்தை (ஏறத்தாழ) எளிதில் நிர்ணயித்துக் கொள்ள முடியும். இதற்குச் சிலப்பதிகாரக் காவியம் நமக்கு மீண்டும் உதவி செய்கிறது.

9-ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டைப் பதினாறு யாண்டு அரசாண்டான் என்று பதிகக் குறிப்பு கூறுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை, சேரன் செங்குட்டுவனின் தாயாதிச் சகோதரனுடைய மகன் என்பதை அறிவோம்.

செங்குட்டுவன் சேர நாட்டை யரசாண்ட காலத்தில் இளஞ்சேரலிரும் பொறை கொங்கு நாட்டை யரசாண்டான். ஆனால், செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே, அவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்ட விழா செய்வதற்கு முன்னமேயே, இவன் இறந்து போனான். அதாவது செங்குட்டுவனுடைய 50-வது ஆட்சியாண்டுக்கு முன்பே, (செங்குட்டுவனுடைய 70-வது வயதுக்கு முன்னமே உத்தேசம் கி. பி. 180-க்கு முன்னமே) இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான். இதைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம்.

“சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்”

(சிலம்பு. நடுகல் 147-150)

சதுக்கப்பூதர் என்னும் தெய்வங்களை வஞ்சியில் (கொங்கு நாட்டுக் கருவூர் வஞ்சியில்) அமைத்தவன் இளஞ்சேரல் இரும்பொறையாவன். இதை இவனைப் பாடிய 9-பத்துப் பதிகமுங் கூறுகிறது.

“அறந்திறல் மரபில் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்திவண் இநிறீ