பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை.”

(9ஆம் பத்து பதிகம்)

இதனால் கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரலிரும் பொறை, சேரநாட்டை யரசாண்ட செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்திலேயே (பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்பே) இறந்து போனான் என்று திட்டமாகத் தெரிகிறது. கி.பி. 175க்கு முன்னமே இறந்து போனான் என்று தெரிவதால் (உத்தேசம்) கி. பி. 170-ல் இவன் இறந்து போனான் என்று கருதலாம். இவன் பதினாறு யாண்டு அரசாண்டான் என்று தெரிகிறபடியால் (170-16=154) கி. பி. 154-இல் இவன் சிம்மாசனம் ஏறினான் என்பது தெரிகிறது. எனவே, இளஞ் சேரல் இரும்பொறை உத்தேசமாக கி. பி. 154 முதல் 170 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம்.

சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலேயே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான் என்பதை யறியாமல். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் கே. ஜி. சேஷையரும் அவன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு இருந்தான் என்று எழுதியுள்ளனர். இளஞ்சேரல் இரும்பொறை ஏறத்தாழ கி. பி. 190- இல் இருந்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது முழுவதும் தவறு. செங்குட்டுவனுக்கு முன்னே இறந்து போனவன் அவனுக்குப் பின்னே எப்படி வாழ்ந்திருக்க முடியும்?

இளஞ் சேரல் இரும்பொறைக்கு முன்பு கொங்கு நாட்டை யரசாண்டவன் அவனுடைய பெரிய தந்தையாகிய தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்று அறிந்தோம். அவன் பதினேழு ஆண்டு அரசாண்டான் என்று