பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

பத்தினி தெய்வமாகிய கண்ணகியார் வீடுபேறடைந்தது கொங்கு நாட்டில் என்று கருதப்படுகின்றது. இதுபற்றிக் கருத்துவேறுபாடு உண்டு. இது எப்படியானாலும் கொங்கிளங்கோசர், கொங்கு நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டது உண்மை. செங்குட்டுவன் சேர நாட்டு வஞ்சி மாநகரத்தில் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா செய்வதைக்கண்ட கொங்கிளங் கோசர், பத்தினித்தெய்வத்துக்குக் கொங்கு நாட்டில் கோயில் கட்டி வழிப்பட்டதைச் சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகிறது.[1] கொங்கிளங் கோசர் பத்தினித் தெய்வத்துக்கு திருச்செங்கோடு மலைமேல் கோயில் அமைத்தனர் என்றும், அந்தக் கோயில் பிற்காலத்தில் (தேவாரக் காலத்திலேயே) அர்த்தநாரீசுவரர் கோயில் என்று மாற்றப்பட்டது என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் கொங்கு நாட்டுக் கருவூரில் ஆண்டுதோறும் நடந்த பேர் போன திருவிழா உள்ளிவிழா என்பது. அவ்விழாவில் கொங்கர் மணிகளை அரையில் கட்டிக் கொண்டு கூத்தாடினார்கள்.[2]

பௌத்தர் ஜைனர் ஆகிய மதத்தாரும் அக்காலத்தில் கொங்கு நாட்டில் இருந்தார்கள். அந்த மதங்களின் துறவிகள் ஊர்களில் தங்காமல் காடுகளிலே மலைக் குகை


  1. *(அது கேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழாவொடு சாந்தி செய்ய மழை தொழி லென்று மாறாதாயிற்று.) (உரைபெறு கட்டுரை)
  2. *(கொங்கர், மணியரை யத்து மறுகின் ஆடும், உள்ளி விழவு. அகம்-368:16-18) மதுரை ஆவணி அவிட்டபோ உறையூர் பங்குனி உத்திரமே கருவூர் உள்ளி விழாவே யென இவை' (இறையனார் அகப்பொருள் 17-ஆவது சூத்திர உரை.)

கொ -10