பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158


கடற்கரைப் பக்கங்களில் சங்கு கிடைக்கும் இடங்களில் கடலில் முழுகிச் சங்குகளைக் கொண்டு வந்து வளையல்களாக அறுத்து விற்றனர். ' அக்காலத்தில் தமிழ்நாட்டு மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்திருந்தனர். சங்கு வளைகளை அணிவது நாகரிகமாகவும் பண்பாடாகவும் மங்கலமாகவும் கருதப்பட்டது. குடில்களில் வாழ்ந்த ஏழைப் பெண்கள் முதலாக அரண்மனைகளில் வாழ்ந்த அரசியர் வரையில் எல்லாப் பெண்களும் சங்கு வளையல்களை அணிந் திருந்தார்கள். செல்வச் சீமாட்டிகளும் அரசிகளும் பொன் வளையல்களை அணிந்திருந்ததோடு சங்கு வளையல்களையும் கட்டாயமாக அணிந்திருந்தனர். செல்வம் படைத்தவர்கள் வலம்புரிச் சங்குகளை அணிந்தார்கள். சாதாரண மகளிர் இடம்புரிச்சங்கு வளையல்களை அணிந்தார்கள். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசி, கைகளில் பொன் தொடிகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச் சங்கு வளையையும் அணிந்திருந்தாள்.[1] கோவல னுடைய மனைவி கண்ணகியார் பொன் தொடி முதலான நகைகளை எல்லாம் விற்ற பிறகும் சங்கு வளையை மட்டும் கடைசிவரையில் அணிந்திருந்தார். அவர் கோவலனை இழந்து கைம்பெண் ஆனபோது கொற்றவைக் கோயிலின் முன்பு தன்னுடைய சங்கு வளையை உடைத்துப் போட்டார்.[2] கைம் பெண்களைத் தவிர ஏனைய மகளிர் எல்லோரும் முக்கியமாக


  1. * ('பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை, வலம்புரி வளை யொடு கடிகை நூல் யாத்து' நெடுநல்வாடை 141142.)
  2. ** (* கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து' (சிலம்பு கட்டுரைகாதை-181) இங்குப் பொற்றொடி என்றது பொன் வளையலையன்று, சங்கு வளையை. 'பொற்றொடி