பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162


அயல் நாட்டு வாணிகம்

சங்க காலத் தமிழகம் வெளிநாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது போலவே கொங்கு நாடும் அயல்நாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆனால், கொங்கு நாட்டின் கடல் வாணிகத் தொடர்பைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் யாதொரு செய்தியும் காணப்படவில்லை. சங்கச் செய்யுள்களில் முசிறி, தொண்டி, நறவு, கொற்கை, புகார் முதலிய துறைமுகப் பட்டினங்களில் யவனர் முதலியவர்களின் கப்பல்கள் வந்து வாணிகஞ் செய்த செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால், கொங்கு நாட்டுடன் அயல்நாட்டு வாணிகர் செய்திருந்த வாணிகத்தைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஆனாலும், கிரேக்க உரோம நாட்டவராகிய யவனர்கள் எழுதியுன்ள பழைய குறிப்புகளிலிருந்து கொங்கு நாட்டுக்கும் யவன நாட்டுக்கும் இருந்த வாணிகத் தொடர்பு தெரிகின்றது.

முசிறி, தொண்டி, நறவு முதலிய மேற்குக் கடற்கரைப் பட்டினங்களில் யவனர்கள் முக்கியமாக மிளகை ஏற்றுமதி செய்துகொண்டு போனார்கள். பாண்டியரின் கொற்கைத் துறைமுகப் பட்டினத்திலிருந்து யவன முக்கியமாக முத்துக்களை வாங்கிக்கொண்டு போனார்கள். சோழநாட்டுப் புகார் (காவிரிப்பூம்பட்டினம்)த் துறைமுகப் பட்டினத்தி