பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கொங்கு நாட்டில் இன்னும் பல உரோம தேசத்து நாணயப் புதையல்கள் இருக்கக்கூடும். கிடைத்துள்ள காசுகள் எல்லாம் பொற்காசுகளும் வெள்ளிக் காசுகளுமாக உள்ளன. செப்புக் காசுகள் மிகச் சில. இக்காசுகள் எல்லாம் உரோம சாம்ராச்சியத்தை யரசாண்ட உரோம சக்கரவர்த்திகளின் தலையுருவம் பொறிக்கப்பட்டவை. சில காசுகளில் அவ்வரசர்களின் மனைவியரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கி. மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதி வரையில் உரோம சாம்ராச்சியத்தை யரசாண்ட அரசர்களின் உருவங்களும் முத்திரைகளும் இக்காசுகளில் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலம் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கடைச்சங்க காதத்தின் இறுதியாகும். இந்தக் காசுகள், அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கும் உரோமாபுரி நாட்டுக்கும் நடந்த வாணிகத் தொடர்பை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்டுகின்றன.

கிடைத்துள்ள இந்தக் காசுகளிலே கீழ்க்கண்ட உரோம சக்கரவர்த்திகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை:- துருஸஸ்[1] (கி. மு. 38 முதல் கி. பி. 9 வரையில் அரசாண்டான்.) அகஸ்தஸ் (கி. மு. 29 முதல் கி. பி. 14 வரையில் அரசாண்டான். தைபிரியஸ் (கி.பி. 14 முதல் 37 வரையில் அரசாண்டான்.) கெலிகுலா (கி. பி. 17 முதல் 41 வரையில் அரசாண்டான்.) கிளாடியஸ் (கி. பி. 41 முதல் 54 வரையில் அரசாண்டான்.) நீரோ (கி. பி. 54 முதல் 68 வரையில் அரசாண்டான்.) டொமினியன் (கி. பி. 81 முதல் 96 வரையில்.) நெர்வா (கி. பி. 96 முதல் 98 வரையில்) திராஜன் (98 முதல் 117) ஹேத்திரியன் (117 முதல் 138 வரையில்.) கம்மோடியஸ் {180 முதல் 193 வரையில்.) மற்றும், துருஸஸின் மனைவியான அத்தோனியாவின் முத்


  1. ('Drusus the Elder.)