பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

சேர்ந்த இந்தப் புலவர் கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்த படியால் கருவூர்க் கோசனார் என்று பெயர் பெற்றார். பாலைத் திணையைப் பாடிய இவருடைய செய்யுள் ஒன்று நற்றிணையில் (214) தொகுக்கப்பட்டிருக்கிறது.

கருவூர் சேரமான் சாத்தன்

சாத்தன் என்னும் பெயருள்ள இவர் சேர மன்னர் குலத்தைச் சேர்ந்தவர். இவர் இருந்த கருவூர் கொங்கு நாட்டுக் கருவூர் என்று தோன்றுகிறது. இவருடைய செய்யுள் ஒன்று குறுத் தொகையில் 268-ஆம் செய்யுளாகத் தொகுக்பட்டிருக்கிறது.

கருவூர் நன்மார்பனார்

நன்மார்பன் என்னும் பெயருள்ள இப்புலவர் கருவூரில், வாழ்ந்தவர். இவருடைய வரலாறு தெரியவில்லை. இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 277-ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. வெயிற்காலத்தில் செந்நிறமாக மலர்கிற (கலியாண) முருக்க மலர்க் கொத்து, சேவற்கோழி வேறு சேவலுடன் போர் செய்யும்போது சிலிர்த்துக் கொள்ளும் கழுத்து இறகு போல இருக்கிறது என்று இவர் உவமை கூறியிருப்பது மிகப் பொருத்தமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.

“அழலகைத் தன்ன காமர் துதை மயிர்
மனையுறை கோழி மறனுடைச் சேவல்
போர்புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் ஒண்குரல்”
(அகம் 277:14-17)

கருவூர்ப் பவுத்திரனார்

பவுத்திரன் என்பது இவருடைய பெயர். இவர் பாடிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 162-ஆம் செய்யுளாகத்