பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197

புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமையானும் என்னும் அடிக்கு உரைஎழுதிய நச்சினார் கினியா, ‘கார்த்தரும்’ எனத் தொடங்கும் பாட்டை மேற்கோள் காட்டி (புறத்திரட்டு 1389-ஆம் செய்யுள்) ‘இது பொன்முடியார் ஆங்க வனைக்(?) கண்டு கூறியது’ என்று எழுதியுள்ளார்.

புறத்திணையியலில் ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்ற மும்’ எனத் தொடங்கும் 12-ஆம் சூத்திரத்தின் ‘தொல் எயிற்கு இவர்தலும்’ என்பதன் உறையில் நச்சினார்க்கினியர் (பக்கம் 11-12) ‘மறனுடைய மறவர்’ என்று தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டி ‘இது பொன்முடியார் பாட்டு’ என்று எழுதுகிறார்.

மேற்படி சூரத்திரத்தின் ‘அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்’ என்பதன் உரைபில் ‘கலையெனப் பாய்ந்த மாவும்’ என்னுஞ் செம்யுளை மேற்கோள்காட்டி ‘இது சேரமான் (பெருஞ்சேரல் இரும்பொறை) பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படை பட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறிய விளக்கம்’ என்று கூறியுள்ளார்.

மேற்படி சூத்திரம் ‘உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில் உளப்பட’ என்னும் அடிக்கு உரை எழுதியவர் ‘இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது’ என்று விளக்கங் கூறுகிறார்.

பொன்முடியாரின் செய்யுட்கள் இவ்வளவுதான் கிடைத்திருக்கின்றன. இவர் பாடியவை எல்லாம் புறத்துறை பற்றிய செய்யுட்களே.

பெருந்தலைச் சாத்தனார்

இவர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனாரென்றும் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனாரென்றுங்