பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

சென்று அங்கிருந்த குமணனைப் பாடினார். (புறம் 164) இச் செய்யுளில் இவருடைய வறுமைத் துன்பம் பெரிதும் இரங்கத் தக்கதாக உள்ளது.அப்போது குமணன் என் தலையை வெட்டிக் கொண்டுபோய் என் தம்பியிடம் கொடுத்தால் அவன் உமக்குப் பொருள் தருவான் என்று கூறித் தன்னுடைய போர் வாளைப் புலவருக்குக் கொடுத்தான், அந்த வாலைப் பெற்றுக்கொண்ட புலவர் இளங்குமணனிடம் வந்து குமணன் கொடுத்த வாலைக் காட்டிப் புறம் 15-ஆம் செய்யுளைப் பாடினார். கோடைமலைப் பொருநனாகிய கடிய தெடுவேட்டுவனைப் பாடியுள்ளார். (புறம் 205) இவனை இவர் தம்முடைய (அகம் 13-ஆம்) செய்யுளில் குறிப்பிட்டுள்ளதை முன்னமே கூறினோம். மூவன் என்பவனிடம் சென்று பரிசில் பெறுவதற்குப் புறம் 209-ஆம் செய்யுளைப் பாடினார். புறம் 294ஆம் செய்யுளில் ஒரு போர் வீரனுடைய தானைமறத்தைப் பாடியுள்ளார்.

மருதம் பாடிய இளங்கடுங்கோ

இவர் பெயர் கடுங்கோ என்பது. பெருங்கடுங்கோ என்று ஒருவர் இருந்தது பற்றி இவர் இளங்கடுங்கோ என்று பெயர் பெற்றார். மருதத் திணை பற்றிய செய்யுள்களைப் பாடினபடியால் மருதம் பாடிய இளங்கடுங்கோ என்று இவர் அழைக்கப் பெற்றார். பாலை பாடிய பெருங்கடுங்கோவின் மகனாக இவர் இருக்கக்கூடுமோ? அல்லது தம்பியாக இருக்கக்கூடுமோ ? (பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னுந் தலைப்புக் காண்க.) இவர் கொங்கு நாட்டிலிருந்த அரசர் மரபைச் சேர்ந்த புலவர். இவர் பாடிய. செய்யுட்கள் அகநானூற்றில் இரண்டும் (அகம் 96, 176) நற்றிணையில் ஒன்றும் (நற். 50} தொகுக்கப்பட்டுள்ளன.

பாலைபாடிய பெருங்கடுங்கோ, அவரைப் பாடிய பேய்மகள் இளவெயினி ஆகிய இவர்கள் காலத்தில் இப்புலவர் இருந்தார். அவர்களுக்கு இவர் வயதில் இளைஞர்.