பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

இந்நூல் மருதத்திணை, வேட்கைப் பத்து வேழப்பத்து கள்வன் பத்து தோழிக்குரைத்த பத்து புலவிப்பத்து தோழி கூற்றுப்பத்து கிழத்தி கூற்றுப் பத்து புனலாட்டுப் பத்து புலவி விராய பத்து எருமைப் பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

நெய்தல் திணை, தாய்க்குரைத்த பத்து தோழிக்குரைத்த பத்து கிழவற்குரைத்த பத்து பாணற்குரைத்த பத்து ஞாழற் பத்து வெள்ளாங்குருகுப் பத்து சிறுவெண் காக்கைப் பத்து தொண்டிப் பத்து நெய்தற்பத்து வளைப்பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

குறிஞ்சித்திணை, அன்னாய் வாழிப் பத்து அன்னாய்ப் பத்து அம்மவாழிப்பத்து தெய்யோப் பத்து வெறிப்பத்து குன்றக் குறவன் பத்து கேழற்பத்து குரக்குப் பத்து கிள்ளைப் பத்து மஞ்ஞைப்பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

பாலைத்திணை, செலவழுங்குவித்த பத்து செலவுப்பத்து இடைச்சுரப் பத்து தலை வியிரங்கு பத்து இளவேனிற்பத்து வரவுரைத்த பத்து முன்னிலைப் பத்து மகட்போக்கிய வழித் தாயிரங்கு பத்து உடன் போக்கின் கண் இடைச் சுரத்துரைத்த பத்து மறு தரவுப் பத்து என்னும் பத்துப் பிரிவுகளையுடையது

முல்லைத்திணை, செவிலிகூற்றுப் பத்து கிழவன் பருவம் பாராட்டுப்பத்து விரவுப்பத்து பாசறைப்பத்து பருவங் கண்டு கிழத்தியுரைத்த பத்து தோழி வற்புறுத்த பத்து பாணன், பத்து தேர்வியங்கொண்ட பத்து வரவுச் சிறப்புரைத்த பத்து என்னும் பத்துத் துறைகளைக் கொண்டுள்ளது.

நெய்தற்றிணையில் கிழவற்குரைத்த பத்தில் 9 ஆம் 10ஆம் செய்யுட்கள் மறைந்து போய்விட்டன. முல்லைத் திணையில் கிழவன் பருவம் பாராட்டுப் பத்தில் ஆறாம் செய்யுளின் இரண்டாம் அடியிலும் தேர்வியங் கொண்ட