பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

இம்மலைக்குச் சென்று இந்தச் சாசனங்களைக் கண்டு 1961-62 ஆண்டு அறிக்கையில் வெளியிட்டது.[1] இந்த இலாகாவின் 1961-62ஆம் ஆண்டின் 280-282 எண்களுள்ள சாசன எழுத்துகளாக இந்தக் கல்வெட்டெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எபிகிராபி இலாகாவின் 1963-64ஆம் ஆண்டின் 4362-4364 ஆம் எண்ணுள்ள போட்டோ (நிழற்பட) நெகிடிவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பிராமி கல்வெட்டெழுத்தை (280 of 1961-62) ஆராய்வோம். இந்தப் பிராமி எழுத்துக்கள் இரண்டு வரிகளாக எழுதப்பட்டுள்ளன. முதல் வரியில் பதினான்கு எழுத்துகளும் இரண்டாவது வரியில் பதிமூன்று எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன.


இந்த எழுத்துக்களை எபிகிராபி இலாகா இவ்வாறு படித்திருக்கிறது. எழுத்துப் புணர் (ரு) த்தான் மா (லை)ய் வண்ண க்கன் (தேவ) ன் (சாத்த)ன்

ஐராவதம் மகாதேவன் அவர்கள் இல்வெழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்.[2]** ஏழு தானம் பண்வ (வி) த்தான் மணிய் வண்ண க்கன் தே (வ)ன் சா (த்த)ன்

மணிக்கல் வாணிகனாகிய தேவன் சாத்தன் இந்த ஏழு படுக்கைகளை (ஆசனங்களைச் செய்வித்தான் என்று இதற்கு


  1. (*Annual Report on Indian Epigraphy for 1961-62.P.10)
  2. **(Corpus of Tamil Brahmi Inscriptions by Iravatham Mahadevan. p. 67. Seminar on Inscriptions 1966.)