பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215


இவர் விளக்கங் கூறுகிறார். இவர் 'ஏழு படுக்கைகள்' என்று கூறுவது தவறு. இக்குகையில் மூன்று படுக்கைகள் மட்டும் இருக்கின்றன. ஆகவே இவர் ஏழு படுக்கைகள் என்று கூறுவது பிழைபடுகிறது. கல்வெட்டில் ‘எழுத்தும்’ என்னும் வாசகம் தெளிவாகத் தெரிகிறது.

டி. வி. மகாலிங்கம் அவர்கள் இவ்வெழுத்துக்களை வேறு விதமாக வாசித்துள்ளார்.[1]

“சித்தம், தீர்த்தம் பூண தத்தான் மாளாய வண்ணக்கன் தேவன் சாத்தன்”

என்று இவர் படிக்கிறார்.

இந்தச் சாசன எழுத்துகளில் இரண்டாவது வரியின் வாசகம் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் யாருக்கும் யாதொரு ஐயமும் இல்லை. இதை எல்லோரும் கருத்து மாறுபாடு இல்லாமல் சரியாகவே வாசித்திருக்கிறார்கள். முதல் வரி எழுத்துக்களை வாசிப்பதில் மட்டும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாசித்துள்ளனர். இதுபற்றி ஆய்ந்து பார்த்து இதன் சரியான வாசகம் இன்னதென்பதை நாம் காண்போம்.

முதல் வரியின் முதல் எழுத்து வட்டமாகவும் நடுவில் புள்ளியுடனும் காணப்படுகிறது. இது ‘சித்தம்’ என்னும் மங்கலச் சொல்லின் குறியீடு என்று டி. வி. மகாலிங்கம் கருதுகிறார். சாசன எழுத்து இலாகா இதை எ என்று வாசித் திருக்கிறது. ஐ. மகாதேவன் அவர்கள் ஏ என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் கூறுவது போல இது 'சித்தம்' என்பதன் குறியீடு அன்று. பிராமி எழுத்தில் எ என்பதாகும். முக்கோண வடிவமாகவுள்ளது பிராமி எ என்னும் எழுத்து


  1. (*pp. 290-298. Early South Indian Palaeography by T. V. Mahalingam. 1967) ஃ