பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223


புள்ளிகளும் கலந்திருப்பதால் சில எழுத்துக்களின் சரியான வடிவம் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கிறது. ஆனாலும் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது. இதில் காணப்படுகிற பிராமி எழுத்துகளின் வரிவடிவம் இது. புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பவை பாறையில் உள்ள புரைசல்கள்.


இதன் இப்போதைய எழுத்து வடிவம் இது.

நளளி வ ஊரபபிடத தை மகன கீரன

கொற்றன

இவ்வெழுத்துக்களுக்குப் புள்ளியிட்டுப் படித்தால் இவ்வாறாகிறது :

நள்ளிவ் ஊர்ப் பிடந்தைமகன் கீரன் கொற்றன

திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள் இதை இவ்வாறு படிக்கிறார்:

"நாளளாப ஊர் பிடந்தை மகன் கீரன்கொற்றன்”.


இவ்வாறு படித்துப்பின்னர்க் கீழ்க்கண்டவாறு விளக்கங் கூறுகிறார். ஆதன்+தந்தை = ஆந்தை என்பது போலப், பிடன் + தந்தை பிடந்தை என்றாயிற்று. பிடன் = படாரன், பட்டரான், தந்தை= பெரியவன், மேலானவன், உயர்ந்தவன், புனிதமானவன்.[1] 'பிடன் தந்தை மகன் கீரன் கொற்றன்' என்றும் நாளாளபஊர்' என்றும் இவர் கூறுவது சரியெனத் தோன்றவில்லை.

திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு வாசிக்கிறார்:


  1. *(Page, 283-84, Early South Indian Palaeography, 1967).