பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225


மிகச் சிறு வேற்றுமைதான் உண்டு. லகரத்தின் வலது பக்கத் தின் கீழே, கீழாக வளைந்த கோடு இட்டால் ளகரமாகிறது. இந்தச் சாசன எழுத்தின் நிழற் படத்தை உற்று நோக்கினால் ளகரமாகத் தோன்றுவதைக் காணலாம். ஆகையால் நள்ளி என்று வாசிப்பதுதான் சரி என்று தெரிகிறது. மேலும் நல்லி என்ற பெயர் சங்க காலத்தில் காணப்படவில்லை. நள்ளி என்ற பெயர் காணப்படுகிறது. கடையெழு வள்ளல்களில் நள்ளி என்னும் ஒரு அரசன் கூறப்படுகிறான்.

"நளிமலை நாடன் நள்ளி" (சிறுபாண்-107), 'கழல் தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி' (அகம். 238:14), திண்தேர் நள்ளி கானம்” (குறும் 210:1), "வல்வில் இளையர் பெருமகன் நள்ளி (அகம் 152:15), " கொள்ளார் ஓட்டிய நள்ளி” (புறம் 158:28) என்பன காண்க. கண்டீரக்கோப் பெருநள்ளி சங்கச் செய்யுட்களில் கூறப்படுகிறான். இவன் கொங்கு நாட்டில் கண்டீரம் என்னும் ஊரின் அரசன், இவன் பெயரால் அக்காலத்தில் நள்ளி ஊர் என்னும் ஊர் இருந் திருக்க வேண்டும் என்பது இந்தக் கல்வெட் டெழுத்தினால் தெரிகிறது.

இனி, இதற்கு அடுத்தபடியாக உள்ள நான்கு எழுத்துக் களைப் பார்ப்போம். கல்வெட்டில் இவ்வெழுத்துகள் வ்ஜர்ப் என்று காணப்படுகிறது. இதில் முதல் எழுத்தை மகாலிங்கம் அவர்கள் ப என்று படித்து முதல் மூன்று எழுத்துகளுடன் சேர்த்து' நாளாளப்' என்று படித்துள்ளார். மகாதேவன் அவர் கள் ய் என்று படித்து முதல் மூன்று எழுத்துகளுடன் சேர்த்து " நல்லிய்' என்று படித்துள்ளார். இந்த எழுத்தை உற்று நோக்கினால் வ் என்று தோன்றுகிறது. இதனுடன் அடுத் துள்ள ஊகார எழுத்தைச் சேர்த்தால் வ்ஊ என்ருகும். வூ என்னும் எழுத்துதான் இவ்வாறு வ் என்று எழுதப்பட் டிருக்கிறது. சில சமயங்களில் எழுத்துகள் சாசனங்களில்