பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

இவ்வாறு எழுதப்பட்டிருப்பதைக் கல்வெட்டெழுத்து களிலும் (வ்ஊர்ப்) முன் மூன்று எழுத்துகளுடன் கூட்டினால் நள்ளிவ்வூர்ப் என்றாகிறது,


பிறகு இதற்கு அடுத்த நான்கு எழுத்துகளைப் பார்ப்போம். (8 முதல் 11 எழுத்துகள்) அது பிடந்தை என்றிருக்கிறது. இதை மகாலிங்கமும் மகாதேவனும் பிடந்தை என்று சரியாகவே வாசித்திருக்கிறார்கள். ஆனால், பிடந்தை என்பதை பிட்டன் + தந்தை என்று பிரித்து, பிட்டனுடைய தந்தை என்றும் பிடன் என்பதற்குப் படாரன், பட்டாரன் என்றும் மகாலிங்கம் அவர்கள் விளக்கங் கூறுவது சரியாகவும் இல்லை, ' பொருத்தமாகவும் இல்லை.

பிட்டன் என்னும் பெயருள்ள சேனைத் தலைவன் ஒருவன் சங்க இலக்கியங்களில் கூரப்படுகிறான். (அகம் 77, 143, புறம். 172, 186. புறம் 169, 171 செய்யுள்களின் அடிக் குறிப்பு) அவன் பிட்டங்கொற்றன் என்றுங் கூறப்படுகிறான். காவரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ண னார் புறம் 171 ஆம் அவர் பிட்டங் கொற்றனை எந்தை என்று கூறுகிறார். (புறம் 171:12). புலவர் ஒரு அரசனை எந்தை என்று கூறவேண்டிய தில்லை. அப்படிக் கூறிய மரபும் இல்லை. பிட்டனுக்குப் பிட்டெந்தை என்னும் பெயர் இருந்திருக்க வேண்டுமென்று இதனால் தெரிகிறது. பிட்டெந்தை என்னும் பெயரே இந்தச் சாசன எழுத்தில் பீடந்தை என்று எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.


இதற்கு அடுத்துள்ள மூன்று எழுத்துக்கள் மகன் என்பது. இதை மகாதேவன் ' மகள்' என்று படித்து