பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230


[1] எல்வளைக் குறுமகள்' (நற். 167:10), 'அணியியற் குறுமகள்' (நற். 184:8) முதலியன. குறும் மகள் என்பதை மகாதேவன் அவர்கள் குறும்மக்கள் என்று படிக்கிறார்.

இச்சாசனத்தில் குறும்மகன் என்று இருப்பதாக ஐ. மகாதேவன் எழுதுகிறார். குறும்மகன் என்பது பிழை என்றும் அது குறுமகன் என்று இருக்கவேண்டும் என்றும் எடுத்துக்காட்டுகிறார். குறுமகன் என்பதற்கு இளைய மகன் என்றும் பொருள் கூறுகிறார். இது முற்றிலும் தவறு. குறுமகன் என்பதற்கு இளையமகன் என்பது பொருள் கிடையாது. அதற்குக் கீழ்மகன் என்பது பொருள். ஆனால், குறுமகள் என்றால் இளையமகள், இளம் பெண் என்பது பொருள். இப்பொருளில் இச்சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வந்திருப்பதை மேலே எடுத்துக் காட்டினோம். குறுமகன் என்பதற்கு இளையமகன் என்பது பொருள் அன்று, கீழ்மகன். இழிந்தவன் என்பதே பொருள் உண்டு. உதாரணங் காட்டுவோம்.

குறுமகன் (சிலம்பு-15:95)குறுமகனால் கொலையுண்ண (சிலம்பு-29. உரைப்பாட்டுமடை) கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்ப (சிலம்பு-29. காவற்பெண்டரற்று.) உருகெழுமூதூர் ஊர்க் குறு மாக்கள் (சிலம்பு-30:109), பழைய அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் குறுமகன் என்பதற்குக் கீழ்மகன் என்று உரை எழுதியிருப் பதைக் காண்க. இதன் பொருளை யறியாமல் ஐ.மகாதேவன், குறுமகள் என்பதன் ஆண்பாற் பெயர் குறுமகன் என்று கருதுகிறார். சில பெண்பாற் பெயர்களுக்கு நேரான ஆண்பாற் பெயர்கள் இல்லை என்பதும் அப்படி வழங்குகிற ஆண்பாற் சொற்களுக்குத் தாழ்ந்த இழிவான பொருள் உள்ளன என்றும்


  1. (*Historical Tamil Brahmi Inscriptions)