பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233


முதல் வரியில் நான்காவது எழுத்து புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதை இவர் ந் (தந்தகரம்) என்று வாசிக் கிறார். அதற்கு அடுத்துள்ள எழுத்தும் (ஐந்தாவது எழுத்து) புரைசல்களுடன் காணப்படுகிறது. அதை இவர் தை என்று வாசிக்கிறார். முதல் வரியில் கடைசி இரண்டு எழுத்துக்களை இவர் வன் என்று வாசிக்கிறார். இரண்டாவது வரியில் முதல் எழுத்து புரைசல்களுடன் சேர்ந்திருக்கிறது. இதை இவர் மு என்று வாசிக்கிறார். இவ்வாறு இவர் வாசித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. முதல் வரியின் கடைசி இரண்டு என்னும் எழுத்துகள். இரண்டாவது வரியில் முதல் எழுத்து புரைசலுடன் சேர்ந்து மு போலக் காணப்பட்டாலும் அது ம என்னும் எழுத்தே.

திரு. டி. வி. மகாலிங்கம் அவர்கள் இந்த எழுத்துக்களைப் படித்து ஏறக்குறைய சரியான முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால், இதன் கருத்தைத் தெளிவாகவும் நன்றாகவும் விளக் காமல் விட்டுவிட்டார்.[1] இந்தச் சாசனத்தின் முதல் வரியில் ஐந்தாவது எழுத்து புரைசல்களுடன் சேர்ந்து இன்ன எழுத்து என்று தெளிவாகத் தெரியவில்லை. ஞை என்றும் தை என்றும் சொ என்றும் படிக்கும்படி இது காணப்படுகிறது. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதைத் தை என்று வாசித்திருப்பதை மேலே சுட்டிக்காட்டினோம். டி. வி. மகாலிங்கம் அவர்கள் இதை எ என்று வாசித்திருப்பது சரிதான். இதை எ என்றும் ஏ என்றும் வாசிக்கலாம். கடைசி எழுத்தை மகாதேவன் அவர்கள் ன் என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் அவர்கள் பி என்று வாசிக்கிறார். இது ய போலவும் தோன்றுகிறது. இந்த யகரத்தின் கீழே ஒரு கோடு ர கரத்தைக் குறிப்பது போன்று காணப்படுகிறது. இதை


  1. * (P. 282-83. Early South Indian Palaeography 1967). கொ -15