பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235


மன்று என்பது. (மகரத்தின் கீழேயுள்ள புரைசல் மு போலத் தோன்றுகிறது.) எனவே, இந்த எழுத்துகளை,

1. கொற்றக்களஎயி(ல்)

2. மன்று

என்று வாசிக்கலாம்.

கொற்றக் களத்து (கொற்றக்களம்-வெற்றிக்களம்) எயிலைச் சேர்ந்த மன்று என்பது இந்த வாசகத்தின் கருத்து. கொற்றக்களம் என்பது ஒரு இடத்தின் பெயர், கொற்றக்களம் என்னும் ஊரில் இருந்த எயிலுக்கு (கோட்டைக்கு) உரியது இந்த மன்று (குகை). அதாவது, கொற்றக்களத்து எயிலைச் சேர்ந்தவர்கள் இந்த மன்றத்தை முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்தார்கள் என்பது இதன் திரண்ட பொருளாகும்.

புகழூரில் உள்ள இன்னொரு கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். இதுவும் மேற்சொன்ன இடத்திலேயே இருக் கிறது. இது சாசன எழுத்து இலாகாவில் 1927-28 ஆம் ஆண்டில் 347-ஆம் எண்ணுள்ளதாகப் பதிவுச் செய்யப்பட் டிருக்கிறது. இந்த எழுத்து எழுதியுள்ள பாறையில் புரைசலும் புள்ளியும் கலந்திருப்பதனால் சில எழுத்துகள் தெளிவாகத் தெரியவில்லை. (படம் காண்க).

இந்த எழுத்துகளை ஐ. மகாதேவன் அவர்கள்,

"...ணாகன் மகன் (இ) ளங்கீரன்' என்று வாசிக்கிறார்.[1]


  1. * (No. 67, Page 67, Corpus of the Tamil-Brahmi Inscriptions. Seminar on Inscription. 1966)