பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236


இந்தப் பிராமி எழுத்தின் இன்னொரு படம் இவ்வாறு காணப்படுகிறது

திரு. டி. வி. மகாலிங்கம் அவர்கள் இதை இவ்வாறு வாசித்திருக்கிறார்.[1] ணாகன் மகன் பெருங்கீரன்'. இவர் இவ்வாறு படிப்பது சரியான வாசகமே.

நாகன் என்று இருக்கவேண்டியது ணாகன் என்று - ண் ணகரத்தில் தொடங்கப்பட்டிருப்பது பிராகிருத பாஷையின் சாயல் என்று இவர் கூறுகிறார். எழுத்தைப் பொறித்த கற்றச்சனுடைய பிழை என்றும் கருதலாம். பிராமி எழுத்துகளில் நகரத்துக்கும் ண கரத்துக்கும் மிகச் சிறு வேறு பாடுதான் உண்டு. இந்த வேறுபாட்டைச் சிற்பி உணராத படியால் இத்தவறு ஏற்பட்டிருக்கிறது.

நாகன், கீரன் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மனி தருக்குப் பெயராக வழங்கி வந்தன. இப்பெயர்கள் சில அடை மொழிகளுடன் சேர்ந்து வழங்கி வந்தன. இளநாகன், இளிசந்த நாகன், வெண்ணாகன், நன்னாகன், மூப்பேர்நாகன் முதலிய பெயர்களைக் காண்க. அல்லங்கீரன், இளங்கீரன், புல்லங்கீரன், கழார்க்கீரன், கீரங்கீரன், குறுங்கீரன், நக்கீரன், மோசி கீரன், மூலங்கீரன் முதலிய பெயர்களைக் காண்க. இந்தக் கல்வெட்டெழுத்தில் கூறப்பட்டவன் பெருங்கீரன் என்பவன். இவன் நாகனுடைய மகன். நாகனுடைய மகன் பெருங்கீரன் இந்தக் (சகையில் கற்படுக்கையை அமைத்ததாக இந்தச் சாசனம் கூறுகிறது.


  1. * (P. 428. Early South Indian Palaeography. 1967.)