பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240


முதல்வரியின் கடைசியில் உறைய என்னுஞ் சொல் இருக்கிறது. இதை மகாதேவன் உறைய் என்று வாசித் துள்ளார். இது தவறு என்று தோன்றுகிறது. உறைய என்பதே இதன் வாசகம். “ஆற்றூர் செங்காயபன் உறைய... அறுத்த கல் என்று வாக்கியம் செம்மையாக முடிகிறது காண்க. இதற்கு மாறாக வாசிப்பது தவறு என்று தோன்றுகிறது.

இனி இந்தச் சாசனங்களில் வருகிற அரசர்களின் பெயர் களைப் பார்ப்போம். முதல் சாசனத்தில் கோ ஆதன் சேரல்லிரும் பொறை என்று பெயர் காணப்படுகிறது. இரண்டாவது சாசனத்தில் இது (சே)ல்லிரும்புறை என்று எழுதப்பட்டிருக்கிறது. இரும்பொறை என்பதே சரியான வாசகம். சேரலிரும்பொறை என்னும் பெயரில் இரண்டாவது எழுத்தாகிய ரகரம் கல்வெட்டில் விடப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் சேரலிரும் பொறை என்னும் பெயரைக் காண்கிறோம். குடக்கோ இளஞ்சேர லிரும்பொறை, அஞ்து வஞ்சேரல் இரும்பொறை, கோப்பெருஞ்சேர லிரும்பொறை, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் பெயர்களைக் காண்க. இதனால், சேரலிரும்பொறை என்னும் பெயர் இந்தச் சாசனங்களில் சேல்லிரும்பொறை என்று தவறாக எழுதப்பட்டிருப்பது நன்கு தெரிகின்றது.


ஆனால், ஐராவதம் மகாதேவன் செல்லிரும்பொறை என்று படிக்கிறார். இதற்குச் சான்றாக இவர் காட்டுகிற சான்றுகளாவன: செல்லிக்கோமான் (அகம் 216) செல்வக் கோமான் (பதிற்று 67) செல்வக்கடுங்கோ (பதிற்று. பதிகம் 8) சேரமான் இக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் (புறம் 387) செல்லிக்கோமான், செல்வக்கோமான், செல்வக்கடுங்கோ என்னும் பெயர்களில்