பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241


செல் இருக்கிறபடியால், இந்தக் கல்வெட்டில் வருகிற பெயர் செல்லிரும்பொறை என்று இவர் எழுதுகிறார். இதுபற்றி வாதிக்க வேண்டுவதில்லை. இவர் கூறுவதில் உள்ள செல், செல்வம் என்னும் சொல் இச்சாசனத்தில் இடம் பெறவில்லை' சேரல் என்பதே தவறாக சேலிரும்பொறை என்று எழுதப்பட் டிருக்கிறது.

இந்தச் சாசனங்களில் கூறப்படுகிற அரசர்கள் யார் என்பது பற்றிப் பார்ப்போம். திரு. ஐ. மகாதேவன், இச்சாசனங் களில் கூறப்படுகிற அரசர்களைப் பதிற்றுப்பத்து 7, 8, 9-ஆம் பத்துக்களின் தலைவர்களுடன் பொருத்திக் கூறுகிறார். 'கோ ஆதன் செல்லிரும்பொறை' என்று கல்வெட்டில் கூறப்படு கிறவன் 7-ஆம் பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும், கடுங்கோன் என்று கல்வெட்டில் கூறப் படுகிறவன் 8-ஆம் பத்தின் தலைவனாகிய தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறை என்றும் இளங்கடுங்கோ என்று கல்வெட்டில் கூறப்படுகிறவன் 9-ஆம் பத்தின் தலைவனை இளஞ்சேரலிரும் பொறை என்றும் பொருத்திக் கூறுகிறார்.


கல்வெட்டில் கூறப்படுகிற முதல் அரசன் பெயர் கோ ஆதன் சேரல்லிரும் பொறை என்பது. ஐ. மகாதேவன் *செல்லிரும் பொறை' என்று வாசிப்பது தவறு. 7-ஆம் பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று கூறப்படுகிறான். இதில் வருகிற கடுங்கோ என்னும் பெயர் இந்த கல்வெட்டுகளில் கூறப்படவில்லை. கல்வெட்டுகள் கூறுகிற கோ ஆதன் சே(ர)லிரும் பொறைக்குக் கடுங்கோ என்னும் பெயர் இருந்திருந்தால் அப்பெயரைச் சாசனங்கள் கூறியிருக்கு மன்றோ ? மற்ற இரண்டு அரசர்களைப் பெருங் கடுங்கோன், இளங்கடுங்கோன் என்றும் கல்வெட்டுகள் சிறப்பாகக் கூறுகின்றன. முதல் அரசனுக்கு கடுங்கோ என்னும் பெயரைக் கல்வெட்டுகள் கூறாதபடியால், சேரலிரும் பொறையும் செல்வக்